இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் தனுஷுடன் நடிக்கவிருந்தார். அதன்பிறகு கால்ஷீட் பிரச்சனை மற்றும் கதை சரியாக இல்லை என்று அந்த படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டார். சிம்புவிடம் வெற்றிமாறன் வடசென்னை கதையை கூறியது வேறு மாதிரியான கதை. பிறகு வடசென்னை கதையை வேறு மாதிரி மாற்றி அமைந்து வெற்றிமாறன் படத்தை இயக்கினார்.
இருப்பினும் சிம்பு படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.எனவே சிம்பு வெற்றிமாறன் கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனையடுத்து, வடசென்னை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் மற்றும் சிம்பு இருவரும் ஒரு படத்தில் இணையவிருந்தார்களாம்.
SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!
ஆனால், சிம்பு அந்த நேரம் மாநாடு படத்தில் நடித்து கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் நடக்காமல் போய்விட்டதாம். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுரேஷ் காமாட்சி ” வெற்றிமாறன் சாருடன் பணிபுரிய விரும்பினேன. அதனால் வெற்றிமாறன் சாரை அணுகினேன்.
வெற்றிமாறன் சார் சிம்புவுக்காக ஒரு கதை வைத்து இருந்தார். அந்த படமும் உருவாகவும் இருந்தது. ஆனால் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தை அப்டியே விட்டுவிட்டோம். அதன் பின் நாங்கள் வெங்கட்பிரபுவை தொடர்பு கொண்டு மாநாடு படத்தை தொடங்கினோம்” என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஒரு முறையாவது இருவரும் இணைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…