vetrimaaran about Viduthalai Part 2 [File Image]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார்.
இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடிந்த பாடு இல்லை.
விடுதலை திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ.!
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஏன் முடியாமல் இருக்கிறது தாமதமாக ஆகிறது என்ற காரணத்தை இயக்குனர் வெற்றிமாறனே சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மூடுபனியில் எடுக்க முயற்சித்ததால் தான் தாமதமாகிறது.
100 நாட்கள் முயற்சி செய்தோம், அப்படி எடுத்தால் 4 வருடங்கள் ஆகும் என்பதை உணர்ந்தேன்.
எனவே சிஜியில் செயற்கையாக மூடுபனியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விடுதலை2 படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பிளாஷ்பேக் பகுதி மட்டுமே மீதம் இருக்கிறது. மற்ற பகுதிகள் கொண்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன” எனவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…