Vetrimaaran- Shankar[file image]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. சமீபத்தில், நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளதை வீடியோ மூலம் படக்குழு அறிவித்தனர்.
திண்டுக்கல் அருகே சிறுமலை காடுகளில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் படத்தில் வரும் பிளேஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் கதாபாத்திரம் 1960களில் அமைக்கப்படவுள்ளதால் ‘டி ஏஜிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்ட இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கர் இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலஹாசனை இளமையாக காட்ட அந்த தொழில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் படத்தை தொடர்ந்து அடுத்த உண்மை சம்பவத்தில் சூர்யா!
தற்போது, அவரை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்திற்காக அந்த வேலையை செய்து வருகிறார். இப்பொது, சிறுமலையில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘விடுதலை’ இரண்டாம் பாகம் மீண்டும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…