காதலி வைஷ்ணவிவை கரம்பிடிக்கும் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்துக்கள்.!

சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த்  மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும்  நாளை திருமணம் நடைபெறுகிறது.

vetri,vaishnavi (1)

சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த்  மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும்  நாளை திருமணம் நடைபெறுகிறது.

சென்னை :விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் பிரபலமானவர்தான் வெற்றி வசந்த்  .இவர் அந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தை ஏற்று  மிகவும் தத்ரூபமாக  நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகி சினிமா துறைக்குள் வந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் அவருக்கு பெரிய பெயரை பெற்று கொடுத்துள்ளது .

தான் நடித்த இந்த முதல் சீரியலிலேயே பல சீரியல்களில் நடித்த பிரபலங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வசந்த்திற்கு இந்த சீரியல் மூலம் கிடைத்துள்ளது. அதேபோல் சீரியலில் நடிக்கும் நடிகை வைஷ்ணவி ஆரம்பத்தில் சிறிய கேரக்டர் ரோலில் நடித்து வந்தார் .

பிறகு பொன்னி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இருவருக்குமே சீரியல் துறை பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்கிற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இவர்களது எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நாளை[28-11-2024] இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற இருக்கிறது. தற்போது அவர்களின் திருமண கொண்டாட்டங்களில் முக்கிய நிகழ்வான சங்கீத் பங்க்சன் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை நடிகை வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .மழை தூறலில் வைஷ்ணவி தனது தோழிகளுடன் டான்ஸ் ஆடி வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்