வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள இயலாத திரை பிரபலங்கள் நேற்று முதல் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா இருவரும் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறினர்.
வெற்றி துரைசாமி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.!
முன்னதாக, நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஷால், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.