சென்னை : வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ராம்சரணிடம் சொன்னதால் சூர்யா கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் எப்போது தான் தொடங்கும் என்று கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இருவருமே வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதன் காரணமாகவே இன்னும் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
இருப்பினும், வாடிவாசல் படம் குறித்த கிசு கிசுவும் அடிக்கடி வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அப்படி என்ன தகவல் என்றால் சூர்யா வெற்றிமாறன் மீது கோபப்பட்டு வாடிவாசல் படத்தில் இருந்தே விலக முடிவு செய்துவிட்டாராம்.
அதற்கு முக்கிய காரணமே வாடிவாசல் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் வெற்றிமாறன் அப்படியே சைலண்டாக இயக்குனர் வெற்றிமாறன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரணை சந்தித்து வாடிவாசல் படத்தின் கதையை கூறினாராம். ஆனால், அந்த கதையை கேட்டுவிட்டு ராம்சரண் பிடிக்கவில்லை இந்த கதை இங்கு எடுத்தால் சரியாக இருக்காது என்று கூறி படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம்.
இந்த தகவல் மெல்ல மெல்ல சூர்யா காதுக்கு பட்டதும் சூர்யா ரொம்பவே கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இந்த தகவலை பிரபல சினிமா தகவலை தெரிவிக்கும் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். உண்மையில் வாடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார் அவருக்கு பதில் வேறு ஹீரோ நடிக்கிறார்களா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…