யானை மட்டும் இருந்தா போதாது! ‘தக் லைஃப்’ கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்!

Vetrimaaran

Vetrimaaran : ஒரு படம் வெற்றியடைய யானை மட்டும் இருந்தால் போதாது திரைக்கதை வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் பேரரசு, வெற்றிமாறன், சினேகன், லிங்குசாமி, பாரதி ராஜா, உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய இயக்குனர் பேரரசு இந்த படம் யானையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. யானை என்றாலே பிள்ளையார் யானை என்றாலே ராசி தான். நல்லநேரம் கும்கி மாதிரி இந்த கள்வன் படமும் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

அவரை தொடர்ந்து மேடைக்கு வந்த வெற்றிமாறன் “படத்தின் ட்ரைலர் நன்றாக இருக்கிறது. நாம் யானையை வைத்து படம் எடுத்தாலும் சரி, டைனோசரஸ் வைத்து படம் எடுத்தாலும் சரி திரைக்கதை மற்றும் படத்தின் கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் படம் நன்றாக ஓடும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என கூறினார். வெற்றிமாறன் பேசியதை பார்த்த பேரரசு அவருடைய முகத்தை கூட பார்க்காமல் அந்த புறம் திரும்பிவிட்டார்.

பின் மேடையில் இருந்த சினேகன், லிங்கு சாமி ஆகியோர் வயிறு குலுங்க வெற்றிமாறன்  பேசியதை பார்த்து சிரித்தார்கள். இந்த வீடியோ தான் தற்போது வடசென்னை பின்னணி இசையை வைத்து எடிட் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்