வெற்றிமாறன் சந்திப்பு.. 6 மணிக்கு ஷூட்டிங்.! திரையுலகை பிரமிக்க வைத்த சிம்பு.!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு மும்முரமாகிவிட்டாராம்.

Pathu Thala Silambarasan TR
Pathu Thala Silambarasan TR [Image Source: Google ]

ஏனெனில்,  அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு ஆர்வமாக இருக்கிறாராம். இதனால், தினமும் காலை 6 மணிக்கு கேமராமேன், இயக்குனர்கள் வரும்போதே வந்து நின்று விடுகிறாராம்.

Silambarasan TR Meet Vetrimaaran
Silambarasan TR Meet Vetrimaaran [Image Source: Google ]

இதற்கிடையில், சிம்பு தனக்கு  பிடித்த இயக்குனரான வெற்றிமாறனை சமீபத்தில் சந்தித்துள்ளாராம். அவரோடு சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்கிற சிம்புவின் கனவும் நிறைவேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தக்க சினிமாவட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்களேன்- பிக் பாஸ் டைட்டில் வென்ற பிரபலங்களின் தற்போதைய நிலைமை.! ஷாக்கிங் லிஸ்ட் இதோ…

Silambarasan TR
Silambarasan TR [Image Source: Google ]

மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கான இரண்டாவது பாகத்திற்கான பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு காலத்தில் சிம்பு படப்பிடிப்பு காலதாமதமாக தான் வருவார் என பலரும் அவர் மீது குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சிம்பு வந்துள்ளதால் திரையுலகமே பிரமித்து போய்வுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்