‘மெளன ராகம்’ பட நடிகர் சங்கரன் காலமானார்.! இயக்குனர் பாரதிராஜா இரங்கல்…
பிரபல இயக்குநரும், நடிகருமான ரா.சங்கரன் (92) உடல்நலக்குறைவால் காலமானார். தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன் உட்பட 8 படங்களை இயக்கியுள்ள அவர், மௌன ராகம், சின்ன கவுண்டர், ஒரு கைதியின் டைரி அமரன், அமராவதி, ரோஜாவை கிள்ளாதே, காதல் கோட்டை அரண்மனைக்காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். எனது ஆசிரியர் இயக்குனர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
எனது ஆசிரியர்
இயக்குனர் திரு.ரா.சங்கரன்
சார் அவர்களின் மறைவு
வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SJmO0dApeq— Bharathiraja (@offBharathiraja) December 14, 2023
ஆரம்பத்தில் சிறு நாடகங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய மௌன ராகத்தில் (1986) ரேவதியின் தந்தையான சந்திரமௌலியாக நடித்த அவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.
சென்னையில் இன்று முதல் 21வது சர்வதேச திரைப்பட விழா!
சங்கரன் தனது திரைப்பட நடிப்பு வாழ்க்கைக்கு முன்பே, 1974 இல் ஒன்றே ஒன்று ‘கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் சோ ராமசாமி, ஜெயசித்ரா மற்றும் சிவகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் என 8 படங்களையும் அவர் இயக்கியுள்ளார்