பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கையில் மொபைல் போன் வைத்திருக்கும் இளம் ரசிகருடன் நடிகர் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். சரியான செல்ஃபியை க்ளிக் செய்யவில்லை.
எனவே ஒரு இரண்டு முறை ரசிகர் முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் செல்ஃபி எடுக்கமுடியவில்லை. இதனால் கோபமடைந்த ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் போனை தூக்கி எறிந்தார். பிறகு அந்த ரசிகர் நடிகரிடம் கெஞ்சுவதைக் கேட்கலாம்.
ஆனால் ரன்பீர் கபூர் கண்டுகொள்ளாமல் விலகி செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ரன்பீர் கபூர் செய்த தவறு மிகவும் வருத்தமாக உள்ளது” என்றும் நண்பர்களே, ரன்பீர் கபூர் மிகச் சிறந்த நடிகர், நான் அவருடைய தீவிர ரசிகன், ஆனால் இந்த விவகாரம் எனக்கு வேதனை அளிக்கிறது எனவும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சில நெட்டிசன்கள் டிவிட்டரில் ரன்பீர் கபூர் செய்தது தவறு #angryranbirkapoor என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…