நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்!
read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?
இது குறித்து பேசிய அவர் ” நான் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து என்னுடைய அறையில் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அந்த ஹீரோ இரவு வந்து கதவைத் தட்டினார். கதவை திற திற என்று மதுபோதையில் கேட்டு கொண்டே இருந்தார். நான் கதவை திறக்கவே இல்லை.
read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!
நடுராத்திரியில் இப்படி செய்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு படத்திலிருந்து விலகிவிட்டேன். இயக்குனர்கள் சமாதானப்படுத்தினாலும், நான் ஒப்புக்கொள்ளவில்லை. இது போன்ற விஷயங்களை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இயக்குனர் ஏதேதோ சொல்லி என்னை அந்த படத்தில் நடிக்க வைக்கவே முயற்சி செய்தார்கள்.
read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?
அந்த ஹீரோ அப்படி நடந்துகொண்டதால் படத்தில் இருந்து நான் விலகி நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டேன். என்னை விட அந்த நடிகர் 13 வயது இளையவர். இப்படி ஒரு இளம் தெலுங்கு நடிகரிடம் இருந்து இதுபோன்ற மோசமான நடத்தையை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதில் இருந்து எனக்கு கொஞ்சம் பயம் தான்” என்று நடிகை நிர்மலா வேதனையுடன் பேசியுள்ளார். மேலும், இதனை போலவே, பிக்பாஸ் தமிழ் 7 போட்டியாளரும் முன்னணி நடிகையுமான விசித்ராவும் சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை பற்றி குற்றம் சாட்டி பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.