G.o.a.t எப்படி இருக்கும்? மனம் உருகி பேசிய வெங்கட் பிரபு.!
சென்னை : G.o.a.t எப்படி இருக்கும்? படத்தின் மையக்கரு, விஜய்யின் டபுள் ரோல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த வெங்கட் பிரபு, ‘The G.o.a.t ‘ கற்பனைக் கதைதான், ஆனால் நிஜத்திற்கு மிக அருகாமையில் வற முயற்சி செய்திருக்கிறோம். மேலும் கதையின் கரு குறித்து பேச தொடங்கிய வெங்கட் பிரபு, “SATS அதாவது (special Anti-Terrorist Squad)-னு ஆரம்பதித்தார். இந்த அமைப்பு RAW ஆராய்ச்சி பகுப்பாய்வு பிரிவுடன் இணைந்து இந்த குழு வேலை பார்க்கும்.
இதனை தொடர்ந்து வருவது தான் மற்ற கதைக்களம் என குறிப்பிடலாம் குறிப்பிட்டார். அதாவது, அதில் வரும் பொழுது ஒரு சமயத்தில் சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சிலர், ஒரு காலத்தில் செய்த விஷயங்கள், இப்போ ஒரு பிரச்னையாக மாறி அவங்க முன்னாடி நிக்கிறது.
அதை எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது கதையின் மையக்கரு. படம் பக்கா ஆக்ஷனில் உருவாகி இருக்கிறது. படத்திற்குள்ளே வந்தால் ஒரே திருவிழா தான். நீண்ட நாள் கழித்து தளபதி விஜய்யை நீங்கள் எப்படியெல்லாம் பார்க்க நினைத்தீர்களோ, அது எல்லாமே இருக்கிறது. உண்மையில் திரையில் உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கு.
படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், ஒரு கதாபாத்திரத்தில் இளமையானவராகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் வயதானவராகவும் இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், க்ளீன் ஷேவ் செய்து ஆளே மொத்தமாக மாறி வித்தியாசமாகத் தோற்றமளித்தார். அப்பொழுது, அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்திருந்தனர்.
இது குறித்து பேசிய வெங்கட் பிரபு, “க்ளீன் ஷேவ் பண்ணிட்டு சார் வெளியே வந்ததும் எல்லோரும் என்னைத் திட்டினார்கள், இப்ப அதுவே பிடித்துப் போய்விட்டது. ‘ரொம்ப க்யூட்டா சின்னப் பையன் மாதிரி இருக்கார்’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நமக்குப் பழக்கப்பட்ட, பிடித்த ஒருவரை வேறுமாதிரி காட்டுவதற்குக் காரணங்கள் இருக்கு. படத்தில் கதாபாத்திரத்தோடு நீங்கள் பார்க்கும்போது அழகாக அவரோடு ட்ராவல் ஆகிடுவீங்க”.
படத்தில் ரசிகர்கள் ஆசைப்பட்டது எல்லாமே இருக்கிறது. விஜய் சார் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிப்பதற்கு எல்லா விஷயங்களும் FULL மீல்ஸ் மாதிரி பரிமாறியிருக்கு. எனக்கு விஜய் சார் உச்சபட்ச உயரத்தில் இருக்கும்போது, இந்த வாய்ப்பு வந்திருக்கு. மேலேயிருந்து கிடைத்த ஆசீர்வாதமென்று சொல்லவேண்டும்”என மனம் உருகி பேசிருக்கிறார்.