இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மறைந்த பாடகி பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்னும் பவதாரிணியுடைய இழப்பை ஏற்கமுடியாமல் அவருடைய குடும்பமே சோகத்தில் இருந்து இன்னும் மீளாமல் வேதனையில் இருக்கிறது. இளையராஜா, யுவன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என அனைவரும் வேதனையில் இருக்கிறார்கள். இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் இளையராஜாவுக்கு தான் மகளா பொறக்கணும் – பவதாரிணி
இந்த நிலையில், இயக்குனரும் பாடகி பவதாரிணியின் சகோதரருமான வெங்கட் பிரபு கடைசியாக தனது குடும்ப நண்பர்களுடனும் பவதாரிணிக்கு அன்பாக முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் வெளியீட்டு ” பாவத்தாவும் நாங்களும் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தங்கையை நினைத்து உருக்கமாக பதிவிட்டு இருக்கும் வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்கள் வார்த்தைகள் இல்லை சார்… உங்கள் மன வேதனையை காலம் தான் மாற்றும் எனவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் உங்கள் குடும்பத்திற்கு மேலும் பலம் கிடைக்கட்டும் எனவும் தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…