ரஜினி – லோகேஷின் ‘கூலி’ டீசரை கலாய்த்த வெங்கட் பிரபு? நடந்து என்ன? எழும் விமர்சனம்…

Karthik Kumar venkat prabhu

Coolie: ரஜினியின் கூலி படத்தின் டீசரை வெங்கட் பிரபு கலாய்த்ததாக செய்திகள் பரவிய நிலையில், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடித்து வரும் புதிய திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அண்மையில், இப்படத்திம் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த டீசரில், ரஜினி ஒரு துறைமுகத்தில் எதிரிகள் கைவசத்தில் இருக்கும் தங்கங்களை மீட்கும் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். மேலும், அதில் ரஜினியின் பழைய திரைப்பட வசனமும் இடம்பற்றிருக்கும். இந்த காட்சிகளை வைத்து, ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் குமார் தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

அந்த வீடியோவில், எல்லா கமர்சியல் படங்களின் ட்ரைலர் ஒரே மாதிரியாக இருக்கிறது என கார்த்திக் குமார் கூறியிருப்பார். அவர் வருவார், அவர் வந்துள்ளார், அவர் செய்யப் போகிறார், என்று தான் படங்களில் காட்சிகள் இடம் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். உடனே, இவ்வாறு வீடியோவை ஷேர் செய்து ரஜினியை கிண்டல் செய்திருக்கிறார் என ஒரு டிவிட்டர் பயனர் பதிவிட, அதற்கு வெங்கட் பிரபு தனது முறையான விளக்கத்தை அளித்துள்ளார்.


தற்போது விமர்சனங்களுக்கு பதிலளித்து, அது மிகவும் உண்மை என்று கூறியுள்ளார். இது கமர்ஷியல் படங்கள் எடுக்கும் நம் அனைவருக்கும் இது பொருந்தும். மேலும், அவர் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். “கமர்ஷியல் டெம்ப்லேட்களில் இருந்து புதியதாக ஏதாவது கொடுக்க முயற்சித்தால், ரசிகர்கள் அதை ஏற்கத் தயாரா?” என்று கேள்வியை எழுப்பினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்