venkat prabhu [File Image]
The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு ‘THE GREATEST OF ALL TIME’ படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றழைக்கப்படும் பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினம் இன்று. இவர் டான்ஸ் மாஸ்டர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர். தற்பொழுது, நடிகர் விஜய்யின் ‘The GOAT’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
பிரபுதேவாவின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘The GOAT’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றரை வெளியிட்டு, படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த போஸ்டரை வெளிட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குனர் சுந்தரம் – மகாதேவம்மா தம்பதிக்கு மகனாக பிறந்த பிரபுதேவா, சிறு வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலைகளை கற்றார். தந்தையிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய அவர் ஜென்டில்மேன் படத்தில், ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு புயலாக சுழன்றாடி, ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர், காதலா காதலா, வானத்தை போல, உள்ளம் கொள்ளை போகுதே படங்களில், நடிகராகவும் திறமையை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து, போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி, ‘மாஸ்டர்’ என்ற செல்லப்பெயருடன் வலம் வருகிறார்.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…