சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய மாஸ் ஹிட் சூர்யா மூவி!!!
நடிகர் சூர்யா – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேல். இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் கதையை ஹரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினாராம். அவரிடம் சொல்வதிற்குள் இயக்குனர் ஹரி, சூர்யாவுக்கு சொல்லிவிட்டாராம். கதையை கேட்ட சூர்யா அட்வான்ஸ் கூட வாங்காமல் எப்போது சூட்டிங் போலாம் என கேட்டு விறுவிறுவென படத்தை முடித்துவிட்டாராம்.
இதனை அறிந்த ரஜினிகாந்த் ஏன் என்னிடம் இந்த கதையை முதலில் சொல்லவில்லை என கோபித்து கொண்டாராம். இதனை இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
DINASUVADU