3 பாகமாக உருவாகும்‘வேள்பாரி’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த புதிய அப்டேட்.!!

இயக்குனர் ஷங்கர் : இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
5 வருடங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் 2ஆவது மற்றும் 3ஆவது பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் 2ஆவது பாகம் நாளை வெளியாகவுள்ளது. ஊழலுக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்க தீவிரமாக நடைபெற்றது. இந்த ப்ரோமோஷன்நிகழ்ச்சியின் போது பல்வேறு விஷயங்களை ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
இந்தியன் 4 பற்றி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரிடம் இந்தியன் 4ஆவது பாகம் எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அத்தகைய திட்டமில்லை என்றார். அதேநேரத்தில் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக கூறினார்
வேள்பாரி குறித்து ஷங்கர்
‘வேள்பாரி’ சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக ஷங்கர் அறிவித்துள்ளார். ‘இந்தியன் 2’ பட புரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், வேள்பாரி சரித்திர நாவலை கொரோனா சமயத்தில் படித்தேன். என்னை மிகவும் ஈர்த்தது, உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கி, திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். ரெடியாக இருக்கு, பிரம்மாண்டத்தின் உச்சமாக அதை 3 பாகங்களாக படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை” எனக் கூறியுள்ளார்.
வேள்பாரி
பொன்னியின் செல்வன் படத்தை போலவே, தானும் ஒரு நாவலை இயக்க போவதாக ஷங்கர் முன்னதாக விழா தெரிவித்திருந்தார். அது தான் இந்த வேள்பாரி நாவலாகும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க ஷங்கர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் முன்னதாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025