ஜெய் பாலையா.! தளபதியின் வாரிசுடன் மோத தயாராகி தேதி குறித்த பாலகிருஷ்ணா.!
தெலுங்கு சினிமாவில் நடிகர் பால கிருஷ்ணாவுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “வீரசிம்மரெட்டி” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி ,துனியா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன்- படப்பிடிப்பில் தனுஷை அடித்த செல்வராகவன்… ! அதிர்ச்சி சம்பவத்தை கூறிய பிரபல இயக்குனர்…
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் அதே தினத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படம் தமிழ். தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், இரண்டு படங்களில் தெலுங்கில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
BALAKRISHNA: ‘VEERA SIMHA REDDY’ LOCKS RELEASE DATE… #NandamuriBalakrishna‘s new film – #VeeraSimhaReddy to release on 12 Jan 2023 #Sankranthi… Costars #ShrutiHaasan… Directed by #GopichandhMalineni… Produced by #MythriMovieMakers. #NBK107 pic.twitter.com/JCJOLIog4t
— taran adarsh (@taran_adarsh) December 3, 2022