சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!
வீர தீர சூரன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படத்தின் வசூல் மற்றும் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்…
வசூல்
வீர தீர சூரன் திரைப்படம் வெளியான நாளில் இருந்தே மக்களுக்கு மத்தியில் அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது என்பதால் படத்தின் வசூலும் அமோகமாக கிடைத்து வருகிறது. தாமதமான வெளியீடு காரணமாக முதல் நாளில் குறைவான வசூல் தான் கிடைத்தது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 3.40 கோடி உலகம் முழுவதும் ரூ. 4.68 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்ததாக இரண்டாவது நாளில் ரூ. 8.05 கோடி , 3வது நாளில் ரூ. 10.35 கோடி என அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்தது. இதனையடுத்து, வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 42 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைப்போல தமிழகத்தில் மட்டும் வெளியான 5 நாட்களில் ரூ. 23 கோடி எனவும், 4 நாட்களில் கர்நாடகாவில் மட்டும் ரூ. 1.28 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி அப்டேட்
இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ZEE5 தளத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சரியான வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ஏப்ரல் 24, 2025 முதல் மே 8, 2025 வரையிலான காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.