இப்போ வரை சினிமாவில் இருக்க இது தான் காரணம்! மனம் திறந்த வேதிகா!

வேதிகா : தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்த நடிகைகள் எல்லாம் இன்றய காலத்திலும் ரசிகர்கள் மனதில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். இருப்பினும், 90ஸ் காலகட்டத்தில் குறைவான படங்களில் நடித்து கலக்கி வந்த வேதிகா இன்று வரை அப்படியே ரசிகர்கள் மனதிலும், நிஜத்தில் இளமையாகவும் இருந்து வருகிறார். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தாக்குப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வெளிப்படுத்தியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய நடிகை வேதிகா ” தென்னிந்திய மொழிகள் எனக்கு எதுவும் தெரியாது. மற்றவர்களை போல எனக்கு சகஜமாக பேச வரவே வராது. அப்படி பேச கொஞ்சம் தடுமாறுவேன். இருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் இன்று வரை தாக்குபிடித்து வருவதை நினைத்து பெருமைபடுகிறேன்.
எனக்கு கொடுக்கப்படும் வேலைகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து வருகிறேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும்போது அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு இயக்குனரிடம் பேசி நான் பேசவேண்டிய வசன பேப்பர்களை வாங்கிவிடுவேன். அப்போது தான் நான் தயக்கம் இல்லாமல் பேச சரியாகவும் இருக்கும்.
எனக்குள் இருக்கும் இது போன்ற திறமைகள் தான் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நான் நடிக்க கை கொடுத்து வருவதாக நினைக்கிறன்” எனவும் நடிகை வேதிகா பேசியுள்ளார். மேலும். நடிகை வேதிகா தற்போது, பிரபு தேவாவுக்கு ஜோடியாக பேட்டராப் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.