ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!

vasundhara kashyap

வட்டாரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து உன்னாலே உன்னாலே, கலைபனி, தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை, பொறாளி, சொன்ன புரியாது உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவரை ஒரு முன்னணி நடிகையாக உயர்த்திய திரைப்படம் எதுவென்றால், தென்மேற்கு பருவக்காற்று தான்.

இந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஒரு கிராமத்தில் வாழும் பெண் எப்படி இருப்பாரோ அதே போலவே இருப்பார். இப்படி நன்றாக நடிக்க தெரிந்த இந்த நடிகைக்கு சமீபகாலமாக பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பும் வரவில்லை. இருந்தாலும் சின்ன சின்ன படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

மீண்டும் அந்த மாதிரி படத்தில் நடிக்கும் நயன்தாரா! இயக்குனர் யார் தெரியுமா?

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ஆரம்ப காலத்தில் எல்லாம் படங்களில் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் சிறிய சிறிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவந்தேன். ஆனால், இப்போது கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நான் வேறு மாதிரி சில முடிவுகளை எடுத்து இருக்கிறேன்.

முன்னாடி இருந்த காலகட்டத்தில் எல்லாம் ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்கவேண்டும் அப்போது தான் பிரபலமாக முடியும் என்று சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது மாறிவரும் காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள். குறிப்பாக நடிகை ரம்யாகிருஷ்ணா மேடம் ஒரு உதாரணம். அவர் எல்லாம் அந்த காலத்தில் இருந்தே ஹீரோயின் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

எனவே, எனக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவே சலித்துவிட்டது எனவே இதன் காரணமாக நான் வில்லத்தனத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை காட்ட ஆசைப்படுகிறேன் தற்போது அதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க தான் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாகவே நடிப்பேன்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் வில்லியாக தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்