அனிருத் வெளியிட உள்ள ‘தரமணி’ வசந்த் ரவியின் புதிய படம்!
தரமணி என்ற தனது முதல் படத்திலேயே நடிபில் 100 மார்க் வாங்கியவர் நடிகர் வசந்த் ரவி. இப்படத்தை ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கி இருந்தார். இந்தபடம் சமூகத்தில் நடக்கும் பல சூழ்நிலைகளை அசால்டாக கடந்து சென்றது. இதில் ஆன்ட்ரியா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்த வசந்த் ரவி, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டார். இதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்க்கு தர்புகா சிவா இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.
DINASUVADU