பெரும் சோகம்…’வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை!

Ravi Shankar RIP

ரவி ஷங்கர் : தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரவி ஷங்கர். 63 வயதான இவர் சென்னை, கே.கே.நகரில் வசித்து வந்த நிலையில், இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். திடீரென அவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறப்புக்கு பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இவருடைய இறப்பு செய்தி குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் “திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே கே நகரில் உள்ள தன் அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர்!
தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன்.

ஒரு மிகப் பெரிய இயக்குனராக அல்லது பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார்.
போய்வாருங்கள் ரவிஷங்கர்… வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்… ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது” என கூறியுள்ளார்.

‘குதிரை’ சிறுகதை மூலம் பாக்யா பத்திரிகையில் எழுத்தாளராக தனது பயணத்தை துவங்கிய ரவிஷங்கர், இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்: சூர்யவம்சம் படத்தில் ரோசாப்பூ உள்ளிட்ட பல பாடல்களையும் எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இவர் எழுதியது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi