தளபதியின் குட்டி கதைக்கான மேடை ரெடி… ரசிகர்களே ரெடியா.? பிரமாண்ட அறிவிப்பு இதோ.!

Default Image

நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் என்றால் கண்டிப்பாக படம் வெளியாவதற்கு முன்பே அதற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றுவிடும். அதில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Master Audio Launch
Master Audio Launch [Image Source: Twitter]

அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். பிறகு விஜய்யுடன் நேர்காணல் என்று நெல்சன் அவரை பேட்டி எடுப்பதுபோல ஒரு நேர்காணல் மட்டும் நடந்தது.

Varisu
Varisu [Image Source: Twitter ]

இந்த நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில்  பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

Varisu Audio Launch
Varisu Audio Launch [Image Source: Twitter]

இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 24-ஆம் தேதி படத்தினுடைய மொத்த பாடலும் ஆல்பமாக வெளியாகவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசைவெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்