வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

Default Image

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் திறந்த நடிகை தர்ஷா குப்தா…

அந்த வகையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 2-ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் அதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், “வாரிசு” திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவுக்கான முழு வீடியோ  நாளை ஜனவரி 1 -ஆம் தேதி புத்தாண்டை பண்டிகையை  முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்