வாரிசு, துணிவு-க்கு கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்துக்கு கொடுத்திருக்க வேண்டும் – எச்.வினோத் கருத்து.!
வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்குக் கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும் என இயக்குனர் எச்,வினோத் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தீரன் , சதுரங்கவேட்டை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் எச்.வினோத். இவர் அதிகமாக பேசி யாரும் பார்த்திருக்கமாட்டிர்கள், அப்படியும் பேசினால் கூட அதில் சில அர்த்தங்கள் இருக்கும். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில விஷயங்கள் பேசியுள்ளது பேசப்பட்டு வருகிறது.
விருது விழாவில் பேசிய எச்.வினோத் ” வணிகம் (பிசினஸ்) எங்கு இருக்கிறதோ அங்கு நாம் கண்டிப்பாக நேர்மையாக இருக்க முடியாது. ‘கடைசி விவசாயி’ படத்திற்குக்கு இன்னும் அதிகமாக வரவேற்பது கொடுத்திருக்க வேண்டும். அது ரொம்பவே நல்ல ஒரு அழகான திரைப்படம்.
‘துணிவு’ , ‘வாரிசு’ ஆகிய படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்ப்பு கொடுத்திருந்தார்களோ அதே அளவிற்கு ‘கடைசி விவசாயி’ படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வினோத் அஜித் பட இயக்குநர் என்பதைத் தாண்டி பலருக்கும் பிடிக்க காரணம் அவருடைய பேச்சு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கடைசி விவசாயி திரைப்படத்தை மு. மணிகண்டன் இயக்கி இருந்தார். படத்தில் விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு, ரவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.