வாரிசு பட பிரபலம் திடீர் மரணம்…அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
வாரிசு படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு கொச்சியில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 50. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளார்.
வாரிசு திரைப்படம் வரும் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு மரணமடைந்துள்ளது படக்குழுவுக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. மேலும், இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சுனில் பாபு துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட பல படங்களில் புரொடக்ஷன் டிசைனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.