வாரிசு, துணிவு படத்தை வெளியிட தடை…சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் நாளை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்பதால் இரண்டு படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு படங்களுக்கான டிக்கெட்காண முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்திற்கு அதிகாலை 1.00 மணி காட்சியும், விஜய்யின் வாரிசு படத்திற்கு அதிகாலை 4.00 மணிக்கும் முதல் நாள் முதல்காட்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கட்டப்பட்டுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனங்கள் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் துணிவு படத்தை போனிகபூரும். வாரிசு திரைப்படத்தை தில் ராஜுவும் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.