அக்கா தங்கச்சி கிட்ட இதை பண்ணுவியா? கடுப்பான நடிகை வரலட்சுமி!
Varalaxmi Sarathkumar நடிகை வரலட்சுமி சரத்குமார் படங்களில் எந்த அளவிற்கு தைரியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாரோ அதைப்போலவே நிஜ வாழ்க்கையிலும் தைரியமான ஒரு பெண்மணி. தன்னிடம் எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கு ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே பதில் அளித்தும் விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அவருடைய பதிவுகளுக்கு கீழ் வரும் மோசமான கமெண்ட்ஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
அந்த கேள்விக்கு பதில் அளித்த வரலட்சுமி” என்னை பற்றி அப்படி தவறான கருத்துக்களை பற்றி நான் கண்டுகொள்ளவே மாட்டேன். ஏனென்றால், அவர்களை எல்லாம் நான் ஒரு ஆளாகவே மதிக்கமாட்டேன். அப்படியெல்லாம் தவறான கமெண்ட்ஸ் செய்பவர்களை பற்றி நான் முதலில் யோசிப்பது மற்றும் அவர்களிடம் கேட்பது உன் அக்கா தங்கச்சி கிட்ட இதை பண்ணுவியா? என்று தான்.
READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
அப்படி பேசுபவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். ஆனால், முகம் தெரியாமல் தான் அவர்களால் பேச முடியும் நேரில் வந்து பேசும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் கிடையாது. முகத்தை காட்டாமல் மட்டும் தான் அவர்களால் அப்படி பேசமுடியும். என்னுடைய சமூக வலைத்தளத்தில் எப்படி பதிவுகளை போடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
பிடித்திருப்பவர்கள் அதனை லைக் செய்கிறார்கள். பிடிக்காதவர்கள் செல்கிறார்கள். எனவே, யாரையும் நான் வற்புறுத்தி என்னுடைய பதிவுகளை பாருங்கள் லைக் போடுங்கள் என்று கூறவில்லை. பிடித்திருந்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்கவேண்டாம். ஆனால், இப்படியெல்லாம் தவறான கமெண்ட்ஸ் செய்யாதீர்கள்” என்று வரலட்சுமி கூறியுள்ளார். மேலும், வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் காதலித்து விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.