போன ஜென்மத்தில் நான் இப்படி தான் இருந்திருப்பேன் என ட்விட்டரில் பதிவிட்ட வரலட்சுமி

Default Image

நடிகை வரலக்ஷ்மி  நடிப்பில் கடந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. இதில்”சர்க்கார்”திரைப்படமும் ஓன்று அப்படத்தில் வில்லியாக  நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தை தேர்வு செய்து வருகிறார்.தற்போது இவர் “ராஜபார்வை”படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் “நான் போன ஜென்மத்தில் நிச்சயம் போலீஸ் அதிகாரியாகத்தான் இருந்திருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை வரவேற்கும் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.இவர் “டேனி”திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/varusarath/status/1121272737933041664

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்