வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் ஹரி வைரவன் நடிகர் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்.
தமிழில் குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். நீண்ட நாள்களாக இவர் உடல் சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவருடைய மனைவி ஊடகங்கள் வாயிலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தனது கணவன் கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் மருத்துவ செலவுக்காக உதவி வேண்டும் என்று கேட்டிருந்தார். இதனை அறிந்த சக நடிகர்களான பிளாக் பாண்டி, கார்த்திக், சரவணா ஆகியோர் ஹரி வைரவனுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தனர்.
இதனையடுத்து, மருத்துவர்கள் ஹரி வைரவன்னுக்கு சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை 12.15 மணி அளவில் ஹரி வைரவன் காலமானார். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…