1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான கதாபாத்திரத்தினுடைய போஸ்டரை வெளியீட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று காலை படத்தில் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா கதாபாத்திறத்திற்கான போஸ்டரி வெளியீடபட்டது. இதனை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு கார்த்தி வந்தியத்தேவனாக டிவிட்டரில் அளித்த பதிலில், ” இளவரசி, நீங்கள் இருக்கும் லைவ் லொகேசனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் அளிக்க வேண்டும்” என கலாய்த்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…