இனி வாரம் ஒரு வலிமை அப்டேட்.! எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! டீசர், ட்ரைலர்.!

Default Image

வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் நெருங்கி வருவதால், இனி வார வாரம் டீசர், ட்ரைலர் பாடல் என அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜித்குமார் நடித்து வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து H.வினோத் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் என்பதாலும், அஜித்குமாரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் கடந்துவிட்டது என்பதாலும் ரசிகர்கள் வலிமையை கொண்டாட காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் இருந்து அப்டேட் எப்போ எப்படி வரும் என சொல்லவே முடியாதது போல அப்டேட் வெளியாகி வருகின்றன. அப்டேட் கேட்ட போது வராத அப்டேட் திடீர் திடீர் என அப்டேட் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இரண்டு பாடல்கள், ஒரு கிளிசம்பஸ் வீடியோ என வெளியாகி இருந்த நிலையில், இரண்டு நாள் முன்னதாக திடீரென வலிமை மேக்கிங் வீடியோ வெளியானது. அதே போல படத்தின் ரிலீஸ் கிட்டத்தட்ட நெருங்கு வருவதால், இனி வாரம் ஒரு அப்டேட் வலிமையில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் வாரம் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்