நாளை வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு யுவன் இசையமைக்க சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளாராம். தாமரை இந்த பாடலை எழுதியுள்ளாராம்.
தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகிவிட்டது. இந்த திரைப்படம் வரும் பொங்கல் தினத்த்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. அந்த தேதிக்காக ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் நாங்க வேற மாறி எனும் பாடலும் மட்டுமே வெளியாகியுள்ளது. இவைகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றன.
இதற்கடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன் படி, வியாழக்கிழமை எப்போதும் அஜித்திற்கு பிடித்த நாள் அதனால் அந்த தேதியில் அடுத்து பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்தவார வியாழக்கிழமை (நாளை) படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்போது வெளியானாலும், அந்த பாடலானது அம்மா செண்டிமெண்ட் பாடல், கவிஞர் தாமரை எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளாராம். இன்று மாலை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…