அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்குமார் நடிப்பில் 2022 பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரையரங்குகளை திருவிழாவாக்க வர உள்ளது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 வருடங்களாக அஜித்திற்கு படம் வெளியாகவில்லை. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து வினோத் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் என பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
இந்த படத்தில் இருந்து, யுவனின் இசையில் ஏற்கனவே நாங்க வேற மாறி, அம்மா பாடல் என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டன. மேலும், வலிமை படத்தில் இருந்து கிளிசம்பஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாக உள்ளதாம். இந்த தகவல் தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. வலிமை படம் ரேஸிங் காட்சிகள் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் மேக்கிங் விடீயோக்களுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…