வலிமைக்கு வரப்போகும் புதிய சிக்கல்.! தப்பிக்குமா? தத்தளிக்குமா?

Default Image

தமிழ் தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை காரணமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்ய உள்ளனராம்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித்தின் திரை தரிசனத்திற்கு அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவரை திரையில் காண்பதை தவிர்த்து வேறு எந்த மேடைகளிலும் காண முடியாது. அதனால் அவரை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான பிசினஸ் ஆரம்பித்து படுவேகமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், புதிய வகை ஓமைக்ரான் வகை கொரோனா தாக்கம் தொடங்கியுள்ளதால், மீண்டும் லாக் டவுன் ஏதும் போட்டு திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போய் விடுமோ என வலிமை தயாரிப்பாளரை விட அஜித் ரசிகர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், பழைய பஞ்சாயத்தை மீண்டும் தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளாராம். அதாவது, திரையரங்குகளில் படத்தை திரையிட தற்போது கியூப் (QUBE) சிஸ்டம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. முன்னர் பிலிம் தற்போது கியூப். அந்த நிறுவனம் திரையாங்கில் படத்தை திரையிட அதிக கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.

தற்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது இந்த சூழ்நிலையிலும் கட்டணத்தை கியூப் நிறுவனம் குறைக்க வில்லையாம். அதனால்,வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என ஸ்டிரைக் செய்ய உள்ளனராம்.

இதனால், ஜனவரியில் ரிலீஸ் ஆக உள்ள RRR, வலிமை, ராதே ஷியாம் போன்ற பிரமாண்ட படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை அதற்குள் முடிந்துவிட்டால் வலிமை எந்தவித பிரச்னையும் இன்றி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்