காதலர் தினத்தை ஒட்டி, நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50வது படமான ‘D50’ திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார்.
அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என தலைப்பு வைக்கப்பட்டு மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் ஹீரோவாக பவிஷ் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காதல் கதையம்சத்தை கொண்டு உருவாகி இப்படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று காதலர் தினம் என்பதால், படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…