Valentine Day Special: வரிசை கட்டி ரீ ரிலீஸாகும் ரொமான்டிக் திரைப்படங்கள்.! நீங்க எங்க போறீங்க?

Published by
கெளதம்

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் சில காதல் ரொமான்டிக் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்.

அன்ஹா வகையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல காதல் திரைப்படங்களான டைட்டானிக், சீதா ராமம், 96, வீர்-சாரா, Yeh Jawaani Hai Deewani, ஜப் வீ மெட் ஆகிய திரைப்படங்கள் நாளை (பிப்.,14) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

இது மட்டுமன்றி வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, பிரேமம் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரீரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

4வது நாளின் ‘லவ்வர்’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சீதா ராமம்

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சீதா ராமம்’ திரைப்படம், காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 14ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.சீதா ராமம் காதலர்கள் பெரிதாக விரும்பி கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறலாம். அந்த அளவிற்கு எமோஷனலான காதல் படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி கொடுத்திருந்தார்.

96

ஒரு சில காதல் திரைப்படங்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தை கொடுத்து உருக வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் 96. விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சி. பிரேம் குமார் எழுதி, இயக்க நந்தகோபாலால் தயாரித்திருந்தார்.

கல்கி கி.பி 2898 படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளம்? மிரண்டு போன பாலிவுட்!!

பிரேமம்

மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். அல்போன்சு புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதியை ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்த்க்கது.

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

4 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

5 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

5 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

5 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

6 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago