உலகளவில் 200 சிறந்த பாடகர்கள் பட்டியலில் இடம் பிடித்த ‘வலையோசை’ பாடகி லதா மங்கேஷ்கர்.!
ரோலிங் ஸ்டோனின் 200 சிறந்த பாடகர்கள் பட்டியலில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் 84-வது இடம் பிடித்துள்ளார்.
இந்திய திரையுலகில் முன்னணி பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு காலமானார். இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பாடல் காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில், இவர் அமெரிக்க பத்திரிகையான ரோலிங் ஸ்டோனின் ‘எல்லா காலத்திலும் 200 சிறந்த பாடகர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். புகழ்பெற்ற பாடகர் பட்டியலில் லதா மங்கேஷ்கர் 84-வது இடத்தைப் இவர் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாகிஸ்தானின் நுஸ்ரத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழில் இளையராஜா இசையில் வெளிவந்த வலையோசை, ஆராரோ ஆராரோ, என் ஜீவன் அழைத்தது உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.