டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தனது பாணியில் கொந்தளித்த கவிஞர் வைரமுத்து!
டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தனது பாணியில் கொந்தளித்த கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்டர் பதிவு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுபான கடைகளை மே-7ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுக்கடைகள் திறப்புக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மது என்பது –
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால்
நிராகரிக்கப்படும்போது?#TASMAC #Tamil #TamilNadu #Corona— வைரமுத்து (@Vairamuthu) May 5, 2020