உலகம் இரண்டாக பிளவுப்பட போகிறது…நடிகைகளை சித்தரிப்பது குறித்து பேசிய வைரமுத்து.!

Vairamuthu

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆபாச வீடியோக்களை உருவாக்கும் மர்ம கும்பல் அதனை இணையத்தில் வெளியீடும் கொடூரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதனையடுத்து, பாலிவுட் நடிகை ஜோலை தொடர்ந்து தற்போது ஆலியா பட்டும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செயது பரப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் போலி ஆபாச படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவது தொடர்பாக பேசிய கவிஞர் வைரமுத்து, நடிகைகளைத் தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன் என்றார். நான் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறேன், ஆனால் அதில் கேடு செய்ய நினைப்பவர்களை எதிர்க்கிறேன்.

பருத்திவீரன் விவகாரம்: வேண்டாம் தரம் தாழ்ந்த மனநிலை! ஞானவேலுக்கு எச்சரிக்கை விடுத்த பொன்வண்ணன்!

செயற்கை நுண்ணறிவுக்கு பிறகு உலகம் இரண்டாக பிளவுப்பட போகிறது. AI தொழில்நுட்பத்துக்கு முன்பு, பின்பு என இரண்டு கூறுகளாக அவை இருக்கும் என்று இவ்வாறு சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்