vagai chandrasekar and Vijayakanth [file image]
Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது சண்டை வந்தாலோ அல்லது ஏதாவது வெளியே பிரச்சனை நடந்தாலும் உடனடியாக அதனை தட்டிக் கேட்கும் தைரியத்தையும் கொண்டவர்.
இந்நிலையில், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய வந்தபோது அதனை விஜயகாந்த் எப்படி சமாளித்தார் என்பதற்கான தகவலை விஜயகாந்த் உடன் பல படங்களில் நடித்த வாகை சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். இது குறித்து பேசிய வாகை சந்திரசேகர் விஜயகாந்த் வேட்டியை மடித்து கட்டினால் ஒரு கூட்டமே அமைதியாகிவிடும்.
ஏனென்றால், விஜயகாந்த் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அந்த இடத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும். எனவே அதனை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளும் வருவார்கள். ஆனால் விஜயகாந்த் சும்மா இருக்கமாட்டார். கீழே இறங்கி வேட்டியை மேலே மடித்து கட்டி கொண்டு அமைதி அமைதியா இருங்கள் என்பது போல கூறுவார்.
மற்ற நடிகர் இதனை போல ரசிகர்களிடம் செய்தார்கள் என்றால் அந்த ரசிகர்கள் இவர் என்ன இப்படி கோபப்படுகிறார் என்று நினைப்பார்கள். ஆனால் விஜயகாந்த் மட்டும் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷப்படுவார்கள் அந்த அளவிற்கு விஜயகாந்த் மிகவும் கம்பீரமாக இருந்தார். அவர் நடந்து வந்தாலே அதனை பார்க்கும்போது நமக்கு ஒரு விதமான பலம் கிடைக்கும். அவரை போன்ற ஒரு நல்ல மனிதரை இழந்தது வேதனை அளிக்கிறது” எனவும் நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…