Categories: சினிமா

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்? லிஸ்ட்டை வெளியிட்ட மூத்த நடிகை!

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை எல்லாம் தாண்டி ஆக்சன் படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர். ஒரு காலத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். 1980, 90 கால கட்டத்தில் எல்லாம் இவருடைய படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது.

அப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்துடன் நடிக்கவே சில நடிகைகள் மறுப்பு தெரிவித்தும் இருக்கிறார்கள். அந்த வகையில், அன்னை என் தெய்வம் படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் யார் எல்லாம் என்பதற்கான விவரத்தை பிரபல மூத்த நடிகையான வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இயக்குனர் சிவசந்திரன் கதையில் விஜயகாந்த் சாருடன் நான் அன்னை ஒரு தெய்வம்  திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன்.

அந்த திரைப்படம் அம்மா அப்பா பையன் இவர்களின் மூன்று பேரும் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட வேண்டிய திரைப்படம் படத்தின் கதை எல்லாம் கேட்டு விட்டேன். கதை படத்தின் கதையைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது முதலில் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க நடிகை ராதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ராதிகா கதையை கேட்டுவிட்டு படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் .

பரிதாப செய்தியை காட்டிய இயக்குனர்? உடனடியாக உதவிய விஜயகாந்த்!

அதேபோல ஜீவித்தா அந்த சமயம் ரொம்பவே பிஸியாக இருந்தார் எனவே அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஹீரோயினை போலவே அம்மா காப்பாத்திரத்தில் நடிக்க நடிகை லட்சுமி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது . அவர் நான் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாரார். பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கே.ஆர்.விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்” எனவும் நடிகை வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான இந்த அன்னை என் தெய்வம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். படத்தில் ஆச்சி மனோரமா, ஒய்.ஜி.மகேந்திரன், வடிவுக்கரசி, சிவச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

31 minutes ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

1 hour ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

1 hour ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

2 hours ago

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

2 hours ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

3 hours ago