Vengal Rao- vadivelu [File Image]
சென்னை : பல தமிழ்த் திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ், நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனது நிதித் தேவைகளுக்குப் போராடி வருகிறார். ஆம், வெங்கல் ராவுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ள நிலையில், தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வெங்கல் ராவ், சினிமா நடிகர்களிடம் வீடியோ மூலமாக உதவி கோரியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து நடிகர் சிம்பு, வெங்கல் ராவுக்கு உதவி செய்ய களமிறங்கினார்.
ஆம், நேற்று வெங்கல் ராவின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், இன்று வரை அவர் எந்தவித உதவியும் செய்யவில்லை. நேரில் சென்றும் நலம் விசாரிக்கவில்லை.
இதனிடையே, நேற்று நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய நிலையில், இன்று சின்னத்திரை நடிகர் KPY பாலா ரூ.1 லட்சம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25,000ம் வழங்கியுள்ளனர். இவர்களை தவிர மற்ற நடிகர்களும் வெங்கல் ராவுக்கு உதவ முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…