சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது.
டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
டான் படத்திற்கு பிறகு சிங்கப்பாதை எனும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அசோக் குமார் என்பவர் இயக்குகிறாராம். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு தரப்பு அதனை மறுத்துவிட்டதாம்.
மேலும், இனி வடிவேலு மற்ற ஹீரோ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க விரும்பவில்லையாம். (ஒருவேளை உச்சநட்சத்திர ஹீரோ படத்தில் நடிக்க மட்டும் திதிட்டமிட்டுள்ளாரா என்னவோ) முதன்மை வேடத்தில் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறாராம். அதானால், சிவகார்த்திகேயனின் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டாராம்.
அதேபோல, சிங்கபாதையில் மலையாள முன்னணி நடிகர் பிருதிவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. அந்த செய்தியும் முற்றிலும் வதந்தியாம்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…