அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போக கூடாதா? மாரி செல்வராஜுக்கு குரல் கொடுத்த வடிவேலு.!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்றதற்கு விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு இது தொடர்பாக அவர் பேசுகையில், “அது அவன் ஊரு. அந்த ஊரில் பள்ளம், மேடு எங்கே இருக்கு என்பது அவனுக்குத்தான் தெரியும். அவன் ஊரில் வெள்ளம் வந்தா அவன் போகாமல் வேறு யார் போவார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை” என பேசியுள்ளார்.
ஆனால் அவர் ஏன் அங்கு செல்கிறார் என்று சிலர் கேட்கிறார்கள். அவர் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்தாரு என்று இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார். வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்.!
இந்த இரு மாவட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாரிசெல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களை படகு மூலம் மீட்டு, நிவாரணப் பொருட்களை அளித்தார். இயக்குநர் மாரிசெல்வராஜ் மீட்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.