தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், தானே ஒரு படம் இயக்கி அதில் நடித்துள்ளார். இரவின் நிழல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.மேலும், கோலாகலமாக சர்வதேச அளவில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போஸ்டரில், “இது போன்ற முதன் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களாய் நினைத்து வணங்குகிறேன்” – வடிவேலு ரசிகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…