நம்ம வைகைப்புயல் மாறவே இல்ல…மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு.!
நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். அந்த வகையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக வடிவேலு சென்னையில் உள்ள எத்திராஜ் எனும் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
இதையும் படியுங்களேன்- அட்டகத்தி அஸீம்…பூமர் விக்ரமன்…டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்.!
அங்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடலை பாடி நடனமாடி மாணவர்களை வடிவேலு உற்சாகப்படுத்தியுள்ளார். அங்கிருந்த மாணவர்களுடன் ஆடி, பாடி, வடிவேலு அட்ராசிட்டி செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், வடிவேலு இன்னும் மாறவேயில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடலைபாடி நடனமாடி உற்சாகப்படுத்திய வடிவேலு. #NaaiSekarReturns | #Suraj | #Lyca | #Ethiraj | #Vadivelu pic.twitter.com/OGO9UkUWGL
— CineBloopers (@CineBloopers) December 3, 2022
மேலும் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன், மற்றும் லாரன்ஸுடன் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.