Vadivelu: வடிவேலுவும் தனக்கும் இன்றும் மனக்கசப்பு இருப்பதாக எழுப்பட்ட கேள்விக்கு தம்பி ராமையா பெரும் தன்மையுடன் பதில் அளித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அசால்ட்டாக காமெடி செய்து விட்டு கிளம்பி விடுவார். இவர் தனியாக காமெடி செய்வதை விட இவரை சுற்றி இருக்கும் சக நடிகர்களை வைத்து காமெடி செய்யும் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.
இவ்வாறு பல நடிகர்களுடன் வடிவேலு காமெடி செய்திருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது சக நடிகர்கள் தன்னை மிஞ்சி வளர்ந்து விடுவார்களோ… அல்லது புகழின் உச்சம் தொட்டு விடுவார்களோ… என்று நினைக்கக் கூடியவர்.
அந்த விஷயத்தில் அவர் மிகவும் கண்ணியமுடன் இருப்பவர், அவ்வாறு நடிகர்களை பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார். அவர் நடிக்கும் படத்திலும் அவர் நடிக்க விடாமல் செய்துவிடுவார். இது போல் பல படங்களில் பலரை இவ்வாறு செய்து இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வடிவேல் உடன் நடித்திருந்த சில நகைச்சுவை கலைஞர்கள் அவரை பற்றி நேர்காணலில் கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம். அதே போல் தான் நடிகர் தம்பி ராமையாவும், வடிவேலு உடன் தம்பி ராமையா இடம்பெறும் காமெடி காட்சிகள் பலரை ராசிக்க வைத்துள்ளது.
நடிகர் தம்பி ராமையா நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, கதை ஆசிரியர் இயக்குனரும் கூட. அந்த வகையில், வடிவேலுவை வைத்து ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் வரும் சில காட்சிகளை தயாரிப்பாளர் நீளம் அதிகமாக இருப்பதாய் சுட்டி காட்டி நீக்க சொன்னதால் வடிவேவின் காட்சிகளை தம்பி ராமையா நீக்கியதால், இருவரது உறவு விட்டுப் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய நடிகர் தம்பி ராமையா, “நான் குணசித்திர நடிகர், படங்களில் நடிப்பது அப்படி இப்படின்னு…தனியாக சென்று விட்டேன். ‘அவர் ஹ்யூமர் சக்கரவர்த்தி..நான் குருடரில் விழுந்த மண்..அவர் பேரரசு’ என பெரும் தன்மையுடன் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஆனால், ஒரு விழா மேடையில் வடிவேலு காமெடியை எடுத்து விட ஷங்கர் விழுந்து விழுந்து சிரித்தார். இது தான் வடிவேலுவின் ஹ்யூமர் என்று கூறியதுடன், எனது குடும்பத்தினருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் என கூறினார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…