நடிகர் விஷாலின் தந்தையை ஏமாற்றிய தொழிலதிபர்!கைது செய்யப்பட்ட வடிவேலு!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் விஷால்.இவர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.
இவர் பதவிகாலம் முடிந்தும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்காததால் விமர்சனத்திற்கு தள்ளப்பட்டார்.இந்நிலையில் அவர் தந் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என குறிக்கோளாய் இருக்கிறார்.
மேலும் அவரின் பெற்றோர் அண்மையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் 86 லட்சம் மோசடி செய்ததாக மத்திய குற்ற பிரிவின் படி பிரபல கல்குவாரி அதிபர் மீது புகார் கொடுத்துள்ளார்.
விஷாலின் தந்தை கொடுத்த புகாரில் தொழிலதிபர் வடிவேலு தமது கல்குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டுள்ளார்.
ஆனால் கருங்கல், ஜல்லி தராமலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் வடிவேலுவின் மீது வழக்கு தொடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.